பாலக்கோடு அரசு பள்ளி வகுப்பறை கட்டிடத்தில் விசபூச்சி, பாம்புகளால் மாணவிகள் அச்சம் ..போதிய கட்டிட வசதி இல்லாததால் தரையில் அமர்ந்து பாடம் பயிலும் அவலம்.. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அரசு மகளிர் மேல்நிலைபள்ளி செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் 2200 மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த பத்தாண்டுகளாக எந்த ஒரு கூடுதல் கட்டிடமும் புதியதாக கட்டாத நிலையில் பள்ளியில் பயிலும் பலமாணவிகள் ஒரு வகுப்பறையில் அடைத்து வைத்து பயிலும் நிலையில் உள்ளனர்.

மேலும் பள்ளியில் போதிய இட வசதி மற்றும் வகுப்பறைகள் இல்லாததால் மாணவிகள் மரத்தடியில் பயின்று வரும் நிலை உள்ளது. பள்ளியில் பெரும்பாலன கட்டிடங்கள் பழுது ஏற்பட்டு உள்ளதாலும், சில வகுப்பறைகளில் சுவரில் வெடிப்பு ஏற்பட்டு பெரிய அளவில் ஓட்டை விழுந்துள்ளது. மழைகாலங்களில் விசபூச்சிகள் மற்றும் பாம்புகள் வெடிப்பு வழியாக வகுப்பறைக்கு வருவதால் மாணவிகள் மிகவும் அச்சத்தில் பயின்று வரும் நிலைஉள்ளது.

இதில் வகுப்பறைகள் தரை மற்றும் சுவர்கள் பழுதாகல் மண்புழுதி கிளம்பி மாணவிகளுக்கு அவதியை ஏற்படுத்தி வருகின்றது.அரசு மகளிர் பள்ளி இருபகுதியில் செயல்பட்டு வரும் நிலையில் பள்ளியில் போதிய அடிப்படை வசதியான கழிவரை, குடிநீர் புதிய கட்டிடம் என எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை என பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே பழுதான கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கூடுதல் கட்டிடம், கழிவரை, குடிநீர் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..