Home செய்திகள் சந்திரயான் இலக்கை எட்ட முடியாதது தோல்வி அல்ல. விஞ்ஞான உலகம் வியக்கும் வெற்றி மோடி அளித்து வரும் ஆதரவுக்கு பாராட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் புகழாரம்

சந்திரயான் இலக்கை எட்ட முடியாதது தோல்வி அல்ல. விஞ்ஞான உலகம் வியக்கும் வெற்றி மோடி அளித்து வரும் ஆதரவுக்கு பாராட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் புகழாரம்

by mohan

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் விடுத்துள்ள செய்தி:நிலவை நோக்கிய சந்திராயன் பயணம் அறிவியல் துறையில் இந்தியா நடத்திய அற்புதங்களில் ஒன்றாகும். இதுவரை நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்யும் முயற்சியை உலகில், விஞ்ஞான வளர்ச்சி பெற்ற அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற எந்த நாடும் முன்வர இல்லை. முயற்சி எடுக்கவும் இல்லை. நிலவின் இருண்ட பகுதி என அவர்கள் ஒதுக்கி இருக்கலாம். ஆனால், இந்திய விஞ்ஞானிகள் குறிப்பாக தமிழகத்தில் உருவாகி தரணியெங்கும் விஞ்ஞான உலகில் அற்புதத்தை நிகழ்த்தி வரும் விஞ்ஞானிகள் அண்ணா துரை, சிவன் ஆகியோரது குழுவினர் நிலவின் இருண்ட பகுதியில் மறைந்து கிடக்கும் அதிசயங்களை உலகறிய செய்யும் நோக்கில் சந்திரயானை உருவாக்கி உள்ளனர்.99.9 சதவீதம் வெற்றியை எட்டிய கடைசி நிமிடத்தில் தங்கள் இலக்கை அடைய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இது தோல்வி அல்ல. விஞ்ஞான உலகம் வியக்கும் மாபெரும் வெற்றி. இந்திய விஞ்ஞானிகள் உலக விஞ்ஞானிகளின் பாராட்டு, வாழ்த்து பெற்றுள்ளனர்.மத்திய அரசு குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி இந்திய விஞ்ஞானிகளின் அதிசயத்தக்க ஆய்வுகளுக்கு தொடர்ந்து ஆதரவு, உற்சாகம் அளித்து வருவது வரவேற்று பாராட்டுக் குரியதாகும்.ஒரு மயிரிழையில் தப்பியிருக்கும் முழு வெற்றியை இந்திய விஞ்ஞானிகள் பெற்று உலகின் பாராட்டை பெறுவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்களை மென்மேலும் உற்சாகப்படுத்தி ஊக்கமளித்து உதவிகளை ஊக்குவித்து வருவது மத்திய அரசின் கடமை என்பது மக்களின் எதிர்ப்பார்ப்பாகும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!