வில் மெடல்ஸ் நிறுவனத்திற்கு சென்னையில் விருது!

இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இன்று தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று சாதனையாளர்களை ஊக்கப்படுத்துதல் அறிவுரை பகர்தல் அறிவுரை வழங்குதல் மரக்கன்று நடுதல் சமூக வழிகாட்டுதல் நிகழ்வு நடத்துதல் உள்ளிட்ட பல சேவைகளை செய்து கொண்டிருக்கும் வில் மெடல்ஸ் நிறுவனத்திற்கு சென்னையில் இன்று 31.08.19 சிறந்த அமைப்பிற்கான விருது வழங்கப்பட்டது.

இந்த விருதினை சென்னையை சேர்ந்த SYPA TREE எனும் அமைப்பானது வழங்கியது . தமிழகம் முழுவதும் இருந்து சிறந்த தொழில் முனைவோர் & சிறந்த நிறுவனங்களுக்கு 31.8.2019 அன்று காலை சென்னையில் ராயபுரத்தில் அமைந்துள்ள ரம்ஜான் மஹாலில் விருது வழங்கிக் கௌரவித்தது. தொழில்முனைவோர்கள் சாதனையாளர்கள் சமூக சேவகர்கள் உள்ளிட்ட 90 நபர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது .பல துறைகளிலும் முத்திரை பதித்து வரும் நபர்கள் இந்த SYPA விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டுடார்கள். இவ்விருதினை வில் மெடல்ஸ் சார்பாக வில் மெடல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் & தலைவர் Dr.கலைவாணி மற்றும் முதன்மை செயலர் தஹ்மிதா பானு ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். இந்த நிகழ்விற்கு யுனிவர்சல் சிண்டிகேட் நயினார் முகம்மது எஸ்டி கொரியர் நிர்வாக இயக்குனர் அன்சாரி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..