Home செய்திகள் தடை செய்யப்பட்ட மருத்துவ கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி எரிப்பதால் பொதுமக்கள் எதிர்ப்பு

தடை செய்யப்பட்ட மருத்துவ கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி எரிப்பதால் பொதுமக்கள் எதிர்ப்பு

by mohan

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கும்மனூர் கிராமத்தில் நடராஜ் (70) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அவருடைய அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக அதே கிராமத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகி ராஜகோபால் (35) என்பவர் கர்நாடகா மாநிலம் பெங்களுர் மருத்துவமனைகளிலிருந்தும், ஓசூர் பகுதியில் உள்ள மருத்துவமனைகளிலிருந்தும் மருத்துவ கழிவுகள் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்திய உபகரணங்கள் கழிவுகள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றை லாரியின் மூலம் கொண்டு வந்து தரம் பிரித்து எரிப்பதால் சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்களுக்கு தலைசுற்றல் மூச்சு தினறல் மற்றும் பல்வேறு உடல் கோளாறுகள் ஏற்பட்டு வருகின்றன.

வழக்கம் போல் இன்று காலை மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த லாரியை அப்பகுதி மக்கள் சிறை பிடித்தனர் பஞ்சப்பள்ளி காவல் ஆய்வாளரிடம் தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி பொதுமக்களை கலைந்து போக சொன்னதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல் ஆய்வாளரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் தகவலறிந்த பாலக்கோடு தாசில்தார் வெங்கடேஷ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர் தனபால், துனை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உடனடியாக சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடந்தினர் 2 நாட்களில் அங்கு கொட்டி வைத்துள்ள மருத்துவ கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர் ..அதனையடுத்து மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்து பஞ்சப்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது இச்சம்பவம் இப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!