தகுதிச் சான்று புதுப்பிக்காமல் இயக்கிய வாகனங்கள் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம், கன்னிவாடி , ஸ்ரீராமபுரம் ஆகிய பகுதிகளில் திண்டுக்கல் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் விஜயகுமார் நடத்திய திடீர் வாகன சோதனையில் 3 ஆட்டோக்கள் 7 மினிலாரிகள் தகுதி சான்று புதுப்பிக்காமல் இயக்கிய காரணத்திற்காக வாகனத்தை பறிமுதல் செய்து கன்னிவாடி மற்றும் ரெட்டியார்சத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.