ஆரணி தொகுதி காங்கிரஸ் எம்.பி. டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் ஆரணி அரசு மருத்துவமனையில் திடீரென ஆய்வு செய்தார்.

ஆரணி தொகுதி காங்கிரஸ் எம்.பி. டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத்  ஆரணி அரசு மருத்துவமனையில் திடீரென ஆய்வு செய்தார்.பின்னர் எம்.பி. டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் நிருபர்களிடம் கூறுகையில், ஆரணி அரசு மருத்துவமனையில் கட்டமைப்பு வசதிகள் நன்றாக உள்ளது. டாக்டர்கள் பற்றாக்குறை, ஸ்கேன் வசதி இல்லை, இவ்வளவு பெரிய மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லை, ஆரணி அரசு மருத்துவமனைக்கு டாக்டர் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்க வரவில்லை என்றால் அவர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கலாம், அபராதமும் வசூலிக்கலாம் என்று விதி உள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கிறேன் என்றார்.அப்போது மருத்துவ அலுவலர் டாக்டர் நந்தினி, முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.சிவானந்தம், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் தவணிவி.பி.அண்ணாமலை, நகரத் தலைவர் டி.ஜெயவேல், தி.மு.க. நகர செயலாளர் ஏ.சி.மணி, மாவட்ட தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் ஆர்.எஸ்.பாபு, காங்கிரஸ், தி.மு.க. பிரமுகர்கள் உடன் இருந்தனர்.மேலும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் செயலாளர் செல்வம், பொருளாளர் கே.எஸ்.செங்கீரன், துணைத் தலைவர் ஏ.எஸ்.கே.சுபானி, துணை செயலாளர் இ.எஸ்.பி.சலீம்பேக் மற்றும் நிர்வாகிகள் விஷ்ணுபிரசாத் எம்.பி.யிடம், ஆரணி நகராட்சி கடைகளுக்கு உயர்த்தப்பட்ட வாடகையை குறைக்க ஆவன செய்ய வேண்டும். சென்னையில் இருந்து ஆரணி- களம்பூர் ரெயில் நிலையம் வரை ரெயில் விடநடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்தனர்.

இதேபோல் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மாவட்ட தலைவர் எல்.குமார், செயலாளர் பக்ருதீன், பொருளாளர் முருகானந்தம், மாநில நிர்வாகி சர்மா கொடுத்துள்ள மனுவில், திண்டிவனத்தில் இருந்து வந்தவாசி, செய்யாறு, ஆரணி வழியாக நகரி வரை செல்லக்கூடிய ரெயில் பாதை திட்டத்தை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆரணியில் பட்டு ஜவுளி பூங்கா, தொழிற்பேட்டை கொண்டு வரநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image