இராமநாதபுரத்தில் வழிப்பறி இருவர் சிக்கினர்

இராமநாதபுரம்- இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை, இராமநாதபுரம் – கீழக்கரை நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக இரவு வேளையில் இரு சக்கர வாகனங்களில் தனியாக செல்வோரை மர்ம கும்பல் வழிமறித்து பணம், செல்போன் போன்றவற்றை பறித்துக்கொண்டு வாகனங்களை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து வந்தனர். இதனால் இப்பகுதிகளில் செல்ல வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். துத்திவலசையை சேர்ந்த குருசரண் என்பவரிடம் ஆக., 17ல் மர்ம கும்பல் வழிப்பறி செய்தபோது அக்கும்பலிடம் இருந்த செல்போனை குருசரண் தற்செயலாக பறித்து கொண்டார். தொடர்ந்து நடைபெற்று வரும் வழிப்பறி சம்பவம் தொடர்பாக கேணிக்கரை இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவசாமி, குகனேஸ்வரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து வழிப்பறி கும்பலை பிடிக்க காவல்கண்காணிப்பாளர்ஓம்பிரகாஷ்மீனாஉத்தரவிட்டார்.குருசரண் கொடுத்த செல்போன் தகவல் படி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மர்ம நபர்கள் கடந்த சில நாட்களாக சென்றுவந்த பகுதிகளில் அந்த வழியாக சென்றவர்களிடம் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதை போலீசார் உறுதி செய்தனர். தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட பெருங்குளம் மேற்குத்தெரு நாகராஜ் மகன் இளையராஜா 24, அழகன் குளம் செட்டிமடை செல்வம் மகன் ரஞ்சித் 20 ஆகியோரை போலீசார் பிடித்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் குருசரண், சக்கரக்கோட்டையைச் சேர்ந்த சமையல் மாஸ்டர் அப்துல்சுக்கூர் உள்ளிட்ட 3 பேரிடம் கத்தியை காட்டி மிரட்டி அரிவாளால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. இந்த சம்பவங்களின்போது உடனிருந்த ஆற்றங்கரை காலனி முனீஸ்வனை போலீசார் தேடி வருகின்றனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image