உசிலம்பட்டி பகுதியில் ரூ 31 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேக்கிழார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட எ. புதுப்பட்டியில் உள்ள கண்மாயினை தூர் வாரும் பணியை அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தொடங்கி வைத்தார்,

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மதுரை மாவட்டத்தில் கண்மாய்கள். ஏரிகள், குளங்கள், ஊரணிகள் குடி மராமத்து செய்து தூர்வாரும் பணிக்காக 31 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார், இதில் 1576 ஊரணிகள், 318 கண்மாய்கள் தூர்வார படுவதாக தூர் வாரப்படுவதால் விவசாயிகள் பெரிதும் பயன்படுவார்கள் எனவும் தெரிவித்தார், இந்நிகழ்ச்சியில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி, மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..