பயன்பாட்டில் இல்லாத பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பிரதான சாலை 14-வது வார்டு பகுதியில் சிறிய பேருந்து நிலையம் உள்ளது..பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லாததால் பேருந்து நிலையம் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வியாபாரம் செய்யும் இடமாகவும்,வாகன நிறுத்துமிடமாகவும் காட்சியளிக்கும் அவல நிலை உள்ளதுஇதனால் பள்ளி குழந்தைகள்,பெண்கள் மற்றும் முதியவர்கள்,பயணிகள் வெயிலிலும், மழையினாலும் சிரமப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்..மேலும் தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றி பேருந்து நிலையத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவருமாறு 14வது வார்டு பொதுமக்கள் மற்றும் இப்பகுதி சமூக ஆர்வலர்கள் ஆலங்குளம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..