ஸ்ரீவில்லிபுத்தூர் பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் திருக்கோயில் திருஆடி ப்பூர தேர் திருவிழா

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் திருக்கோயில் திருஆடி ப்பூர விழா கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது ..கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று பெயர் பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் ..கோதையாகிய ஸ்ரீ ஆண்டாள் பிறந்த ஊராகிய இந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூரம் விழா மிக முக்கியமான நிகழ்ச்சியாகும் ..முதல் திருநாளான 16 சக்கர வாகனத்தில் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னார் பவனி நடைபெற்றது.. 5ம் திருநாளான 31ஆம் தேதி ஐந்து கருட சேவையும் 2 ஆம் தேதி சயன சேவையும் நடைபெற்றது….

இந்நிலையில் ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்சியாக ஆடிப்பூர தேரோட்டம் இன்று.4.8.19 நடைபெற்றது ..திருஆடிப்பூர தேர் திருவிழர காண தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்காண பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்துவருகின்றனர்.. ஆடிப்பூரம் எனப்பவது ஸ்ரீஆண்டாள் பிறந்த நட்சத்திரமாகும்.. இந்நாளில் நடைபெறும் இந்த தேரோட்டத்தில் பங்றேறு ஸ்ரீஆண்டாள் சமேத ஸ்ரீரெங்கமன்னாரை தரிசனம் செய்தால் வாழ்வில் எல்லா நலன்களும் பெறலாம் . மேலும் திருமணம் ஆகாத பெண்கள் ஆண்கள் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் தேரை வடம் பிடித்து இழுத்தால் அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதிகம்.. முன்னதாக இன்று 4.8.19 காலை 5 மணிக்கு ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னர் உற்ஸவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு திருதேரில் எழுந்தருளச் செய்தார் ..தேரோட்டத்தில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் மற்றும்பால்வளத் துறை அமைச்சர் KT ராஜேந்திர பாலாஜி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராஜ ராஜன் மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா முத்தையா சாத்துர் சட்டமன்ற உறுப்பினர் MS R ராஜவர்மன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.. ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் தேர்திருவிழாவையொட்டி பக்தர்கள் பாதுகாப்பிற்காக தென்மண்டல காவல் துறை தலைவர் தலைமையில் 2000க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் மேலும் சென்னை மற்றும் மதுரை உயர் நிதி மன்ற நிதிபதி ஆதிகேசவஸ்லு உட்பட 10க்கும் மேற்ப்பட்ட நிதிபதிகள் கலந்து கொண்டனர்

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..