உஜ்வாலா திட்டத்தில் குறைந்த விலையில் 5 கிலோ எரிவாயு சிலிண்டர்கள் அறிமுகம்

மாண்புமிகு பாரதப் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் O1/05/2016 முதல் ஏழைப் பெண்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது ..இத்திட்டத்தின் கீழ் இதுவரை ஒரு 14. 2 கிலோ சிலிண்டர்களே வழங்கப்பட்டு வந்தன.. இதன் விலை அதிகமாக இருப்பதால் ஏழை மக்கள் அடுத்தடுத்த சிலிண்டர்கள் வாங்க சிரம்மப்பட்டனர்.. அதற்க்காக மத்திய அரசு குறைந்த விலையில் 5 கிலோ சிலிண்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது ..(14. 2 கிலோ ரு 700 5 கிலோ ரூ 250) இதை கையாளுவதும் சுலபம்.. ஒரே சமயத்தில் 2 சிலிண்டர்களும் பெற்றுக் கொள்ளலாம்.. ஏற்கனவே உஜ்வாலா திட்டத்தில் 14.2 கிலோ சிலிண்டர் வைத்திருப்பவர்களும் 5 கிலோ சிலிண்டர்களாக மாற்றிக் கொள்ளலாம். இத்திட்டத்தின் படி 28/07/2019 ஞாயிற்றுக்கிழமை அறந்தாங்கியில் நித்தியருபிணி இண்டேன் கேஸ் ஏஜென்ஸி ஏற்பாடு செய்திருந்த விழாவில் சுமார் 45 பேருக்கு 5 கிலோ சிலிண்டர்கள் இரண்டிரண்டு வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள பெண்களுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மதுரை வட்டார மேலாளரும் புதுக்கோட்டை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளருமான  தியாகராஜன் வழங்கி சிறப்புரையாற்றினார்.. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இதுவரை 7.4 கோடி பெண்கள் பயன் பெற்றுள்ளதாகவும் 8 கோடியாக இன்னும் சில நாட்களில் உயரும் என்றும் கடந்த 5 ஆண்டுகளில் எரிவாயு இணைப்பு 13 கோடியாக இருந்து 26 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்தார் உலக சுகாதார நிறுவனம் இத்திட்டத்தை மிகவும் பாராட்டி உள்ளதாகவும் தெரிவித்தார்..

 சாதிக்பாட்சா.நிருபர்.தேனி.மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..