கோவில்பட்டி கல்லூரியில் யோகா கழக துவக்க விழா

கோவில்பட்டி கோ. வெங்கடசாமி நாயுடு கல்லூரியில் யோகா கழகம் துவக்க விழா கல்லூரியின் ஸ்ரீ என் தாமோதரன் நினைவு கலையரங்கத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் பரமகுரு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இயற்பியல் துறை பேராசிரியை கவிதா மஞ்சு வரவேற்புரையாற்றினார். கல்லூரி செயலாளர் முனைவர் மகேந்திரன் யோகா கழகத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்து தலைமை உரையாற்றினார். இதில் சிறப்பு விருந்தினராக விவேகானந்த கேந்திரத்தின் மூத்த ஆயுட்கால தொண்டரும், விவேகவாணி பத்திரிகையின் ஆசிரியருமான கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு யோகா கலை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இதைத் தொடர்ந்து அய்யனேரி இந்து நடுநிலைப்பள்ளி ஆசிரியை மகா தேவி தலைமையில் யோகா நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இறுதியில் ஆடை அலங்கார வடிவமைப்பு துறை தலைவர் பேராசையை சந்தானலட்சுமி நன்றி கூறினார்

To Download Keelainews Android Application – Click on the Image

August Issue…

August Issue…