உசிலம்பட்டி அரசு மருத்துவமணையில் தங்களுக்கு போதிய இடவசதி ஒதுக்கி தரும்படி 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நாளுக்கு நாள் விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் விபத்து நடந்த உடனே சம்பவ இடத்திற்கு சென்று அவர்களின் உயிரை காப்பாற்றி மருத்துவமணையில் சேர்க்கபடுபவர்கள் தான் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள். ஆனால் 108 ஆம்புலன்சில் பணிபுரியும் பனியாளர்களுக்கு உசிலம்பட்டி அரசு மருத்துவமணையில் ஓய்வு

அறை, மருந்துகள் இருப்பு வைப்பதற்கான அறை, சாப்பிடும் அறை , போன்ற எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லை என பனியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது 108 ஆம்புலன்சில் உபயோகபடுத்தும் மருந்து பொருட்களை வைப்பதற்கு போதிய இடவசதி இல்லாதததால் ஒரு சிறிய அறையில் வைத்துள்ளனர், அந்த அறையில் வைக்கப்பட்ட மருந்து பொருட்கள் அனைத்தும் எலிகள் சேதப்படுத்திவிட்டதால் மருத்துவமணை நிர்வாகம் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது, இதனை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் உசிலம்பட்டி அரசு மருத்துவமணையில் தங்களுக்கு போதிய அறைகள் ஒதுக்கி தருப்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..