பொியகுளம் அருகே பயன்படுத்த முடியாத சாலையால் பொதுமக்கள் அவதி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள முருகமலைநகர் பகுதியில் புதிதாக தார்சாலை அமைப்பதற்காக ஏற்கனவே இருந்த சாலை பெயர்க்கப்பட்டு ஒரு மாத காலத்திற்கு மேலாகியும் புதிதாகசாலை அமைக்கப்படாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பஸ் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் முருகமலை நகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு மாணவ மாணவிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் செல்ல முடியாத நிலையும் உருவாகியுள்ளது. மருத்துவத் தேவைக்காக மக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. சாலைகள் பெயர்க்கப்பட்டு முற்றிலும் சேதமடைந்துள்ளதால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து பொதுமக்கள் எண்டப்புளி ஊராட்சி ஒன்றியம் மற்றும் வடுகபட்டி பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை .மக்கள் நலனில் அக்கறை கொண்டு விரைந்து சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டுமாய் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

 சாதிக் பாட்சா. நிருபர்.தேனி மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..