இராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா..

இராமநாதபுரம்      வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளியில்  காமராஜர் பிறந்த நாள்  கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.  தலைமை ஆசிரியை எஸ்தர் வேணி வரவேற்றார்.

பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் எம்.சோமசுந்தரம்  தலைமை வகித்தார். பள்ளி மேலாண் குழு உறுப்பினர்கள் பழனிவேல் ராஜன்,    நாராயணன் முன்னிலை வகித்தனர்.    மாறுவேடம், பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.     ஆசிரியர் பயிற்றுநர் புரவலர் தேவிஉலகராஜ் பேசினார். அதை தொடர்ந்து கலை நிகழ்ச்சி நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண் குழு உறுப்பினர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின்  ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..