Home செய்திகள் ஏரியா சபையை அமைக்க 32 மாவட்டங்களிலும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் மனு

ஏரியா சபையை அமைக்க 32 மாவட்டங்களிலும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் மனு

by mohan

கர்நாடகா,கேரளாவில் உள்ளதுபோல் தமிழகத்தின் நகர உள்ளாட்சிகளில் “ஏரியா சபை” அமைக்கக்கோரி தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பாக, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்ட ஆட்சியரிடம் சட்ட பஞ்சாயத்து இயக்க நிர்வாகிகள் அரவிந்த், சத்யா, ரமேஷ் பாண்டி, ஆகியோர் மனுகொடுத்தனர். அதென்ன ஏரியா சபை..?

கிராமங்களுக்கு கிராம சபை இருக்கு..!! நகரங்களுக்கு..? தங்கள் ஊரின் வளர்ச்சித் திட்டங்களுக்கு, குடிநீர்-கழிவுநீர்-சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு, உள்ளூர் மக்களே ஒன்று கூடி திட்டமிடுவதற்கு, உள்ளூரில் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்களைக் கண்காணிப்பதற்கும் “கிராம சபை” இருக்கிறது..!! பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளுக்கும் இதுபோன்றதொரு அதிகாரத்தை மக்களுக்குத் தரும் அமைப்பே “ஏரியா சபை”..!! இதை அமைப்பதற்கு 2010லேயே தமிழக அரசு சட்டம் இயற்றியும், அதைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவராமல் ஒளித்துவைத்து, கிடப்பில் போட்டுள்ளார்கள்..!!நகரங்களில் உள்ள மக்கள் “ஏரியா சபை” என்ற சட்டப்படியான கூட்டத்தில் ஒன்று கூடி வார்டு கவுன்சிலர், பேரூராட்சித் தலைவர், நகராட்சி சேர்மன், மேயர்களை கேள்வி கேட்க ஆரம்பித்தால் அவர்களில் ஊழல் அம்பலப்பட்டு போகுமல்லவா..!! ஆகவே, இச்சட்டம் 9 ஆண்டாகியும் இன்னும் காகித அளவிலேயே இருக்கிறது..!!இதனைச் செயல்வடிவத்திற்குக் கொண்டுவர சட்ட பஞ்சாயத்து இயக்கமும் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது..!! இப்பணிகளின் ஒரு அங்கமாக இன்று தமிழகத்திலுள்ள 32 மாவட்ட ஆட்சியர்களிடமும் இதுகுறித்த மனுவினை சட்ட பஞ்சாயத்து இயக்கத்தினர் அளித்துள்ளனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!