Home செய்திகள் டிராக்டர் ஒட்டி அசத்திய மாணவிகள் .முந்திரி நடவு செய்த மாணவர்கள்

டிராக்டர் ஒட்டி அசத்திய மாணவிகள் .முந்திரி நடவு செய்த மாணவர்கள்

by mohan

தேவகோட்டை அரசு தோட்டக் கலைப் பண்ணைக்கு சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் களப்பயணமாக நேரில் சென்று டிராக்டர் ஒட்டி பழகி ,முந்திரி நடவு செய்தனர்.

மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலை மையில் களப் பயணம் சென்றனர். மாணவர்களை அரசு தோட்டக் கலைப் பண்ணை அலுவலர் ஓவியா வரவேற்றார்.மாணவர்களுக்கு முதலில்மல்லிகை,கத்தரி,மாமரம்,புளியமரம்,முந்திரி,பூவரசு,கொய்யா,அரளி போன்ற செடிகளை பற்றி விரிவாக எடுத்து கூறினார்.குழி த்தட்டு நாற்றங்கால் உற்பத்தி எவ்வாறு செய்வது என்பது குறித்து நேரடியாக செயல் விளக்கம் செய்து காண்பித்தார்.மேலும் விண் பதியம் இடுதல்,மண் பதியம் இடுதல்,மென்தண்டு ஒட்டு,நெருக்கு ஒட்டு ,கவாத்து செய்தல் எப்படி என்பதை நேரடியாக விளக்கி னர்.மாணவர்களும் இதனை அங்கு நேரடியாக செய்து பழகினர். அனைத்து மாணவர்களும் சேற்றில் இறங்கி முந்திரி நடவு செய்த னர்.ஆசிரியை செல்வமீனாள் பள்ளியிலிருந்து மாணவர்களை அழைத்து சென்றார் .இன்றயை நிலையில் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக நடுநிலைப் பள்ளி அளவிலான மாணவர்களை நேரடி களப் பயணத்தின் வாயிலாக விழிப்புணர்வு அடைய செய்தது மாணவர்க ளிடையே நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது.அனைத்து மாணவர்க ளுக்கும் டிராக்டர் ஓட்ட கற்று கொடுக்கப்ப ட்டது .டிராக்டர் ஒட்டியது வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவம் என்று மாணவர்கள் கூறினார்கள்.அலுவலர்கள் வெங்கடேசன், சீனிவாசன்,மனோஜ் ஆகியோரும் தோட்டக்கலை துறையை பார்ப்பதற்கு உதவியாக இருந்தனர்.அனைத்து மாணவர்களுக்கும் இயற்கை உணவாக முருங்கை கீரை சூப் வழங்கப்பட்டது. செய்தி வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!