Home செய்திகள் வேலூர் பாராளுமன்ற தொகுதி – ஒரு பார்வை…

வேலூர் பாராளுமன்ற தொகுதி – ஒரு பார்வை…

by mohan

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் 14 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.வேலூர் பாராளுமன்ற தேர்தல் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்த காரணத்தால் கடந்த மார்ச் 16-ம் தேதி நடக்க இருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வேலூர் பாராளுமன்ற தேர்தலை ஆகஸ்ட் 5-ம் தேதி நடத்த உத்தரவிட்டுள்ளது.வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலராக ஆட்சியர் சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டு உள்ளார்.வேலூர் பாராளுமன்ற தொகுதியில் வேலூர், கே.வி.குப்பம்.குடியாத்தம், வாணியம்பாடி | ஆம்பூர் , அணைக்கட்டு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மொத்தம் 14 லட்சத்து 26 ஆயிரத்து 991 வாக்காளர்கள் உள்ளனர். ஆயிரத்து 553 வாக்கு சாவடிகள் உள்ளன. 133 வாக்குசாவடிகள் பதட்டமானவை.வாக்களிக்க ஆயிரத்து 880 மின்னணு இயந்திரம் உள்ளது.வரும் 11-ம் தேதி பேட்டி மனு தாக்கல் துவக்கம் . மனு தாக்கல் 18, மனு பரிசீலனை 19 தேதி நடைபெறும். மனுக்கள் திரும்ப பெற 2 2 – கடைசி நாள் வாக்கு பதிவு ஆகஸ்ட் – 5 எண்ணிக்கை ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெறும் என்று வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார். கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!