Home செய்திகள் இராமநாதபுரம் – நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம் – நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

by mohan

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஓய்வூதியம், பணி வரன் முறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத் தலைவரும், மாவட்ட தலைவருமான வி.பி. தினகரன், மாநில இணை செயலர் எஸ்.மாரிமுத்து தலைமை வகித்தனர். மாவட்ட செயலர் பி.ஞானசேகரன் வரவேற்றார். மாவட்ட துணை தலைவர்கள் பி.பழனீஸ்வரன், டி.பி. செல்வம், துணை செயலர் எஸ்.மாரி முத்து முன்னிலை வகித்தனர்.

பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.முத்து, என்.ஜெகன் குமார் , தமிழ்நாடு அரசு வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.பழனிக்குமார், அரசு ஊழியர் கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பி.ராஜமூர்த்தி, மாவட்ட செயலர் எஸ்.ரவிச்சந்திரன், வட்டத் தலைவர் ஐ.நாகேந்திரன், டாஸ்மாக் பணியாளர்கள் மாநில செயலாளர் கே.முருகானந்தம், மாவட்ட தலைவர் ஐ.பாரதி, மாவட்ட செயலாளர் எஸ்.சந்திர மோகன், வட்டத் தலைவர்கள் கே.என்.துரை ( ராமநாதபுரம் ), ஏ.ஜெகநாதன் (திருவாடானை), எஸ்.நெடுஞ்செழியன் (கடலாடி) , கே.கோவிந்தன் ( பரமக்குடி), எம்.வாசு ( கமுதி), எம்.ஆறுமுகம் (கீழக்கரை), கே.அர்ச்சுணன் (முதுகுளத்தூர்), முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் எம..காசி உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் ஏ.செல்வம் நன்றி கூறினார். நியாய விலை கடைக்கு தனித்துறை அமைக்க வேண்டும், தமிழ்நாடு சிவில் சப்ளை கழக பணியாளர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும், பணி வரன் முறை படுத்த வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும், பொட்டல முறை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளின் பரிசீலனை குழு அறிக்கை வெளியிடக் கோரி ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!