Home செய்திகள் இராமநாதபுரம் -செய்தியாளர்கள் சங்கம் எட்டாம் ஆண்டு கல்வி விழா

இராமநாதபுரம் -செய்தியாளர்கள் சங்கம் எட்டாம் ஆண்டு கல்வி விழா

by mohan

இராமநாதபுரம் செய்தியாளர்கள் சங்கம் எட்டாம் ஆண்டு கல்வி விழா மற்றும் மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா, போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு விழா

இராமநாதபுரம் செய்தியாளர்கள் சங்கத்தின் எட்டாம் ஆண்டு கல்வி விழா மற்றும் மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா, இறகு பந்து ஆட்டத்தில் வென்ற ஜோடிகளுக்கு பரிசளிப்பு விழா ரோட்டரி ஹாலில் 23.6.2019 நடந்தது. இராமநாதபுரம் செய்தியாளர்கள் சங்கத் தலைவர் கே. தனபாலன் தலைமை வகித்தார். சங்க கவுரவத் தலைவர் டி.ஜே.வால்டர் ஸ்காட் , துணைத் தலைவர் ஜி.பரமேஸ்வரன் , இணைச் செயலர் எம்.ரகு முன்னிலை வகித்தனர்.

இணைச் செயலர் ஜி.இளங்கோவன் வரவேற்றார். பிளஸ் 2 மாணவ, மாணவியர் இள. காவ்யதர்ஷினி, ஜெ. தமிழ்ச்செல்வன், மு.பாக்யலட்சுமி, பிளஸ் 1 மாணவ, மாணவியர் கு.அபினேஷ் சர்மா, மு.பார்கவி பாரதி, பத்தாம் வகுப்பு மாணவர்கள் ப.நிஷாந்த், மோ.சந்திர மெளலி, மு.சிவா, கலை நிகழ்ச்சியில் தங்கம் வென்ற கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலை மாணவி கு.அபிதா ஸ்ரீ, செய்தியாளர் சங்கம் சார்பில் நடந்த இறகு பந்து இரட்டையர் ஆட்டத்தில் முதல் இடம் பிடித்த டி.ஜே.வால்டர் ஸ்காட், சங்கர், 2 ஆம் இடம் பிடித்த கு.தங்கதுரை, மோகன், 3 ஆம் இடம் பிடித்த கி. தனபாலன், ஜி.பரமேஸ்வரன் மற்றும் கே.கே குமார், எஸ்.பழனிச்சாமி, டி.பாகற் செழியன், எஸ்.சோணை முத்தன் ஆகியோரை பாராட்டி மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் பரிசு வழங்கி கவுரவித்தார். காவல் துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ. அண்ணா துரை, செய்யது அம்மாள் அறக்கட்டளை அறங்காவலர் செல்லத்துரை அப்துல்லா, வழக்கறிஞர் சங்கத்தலைவர் ஆ.ரவிச்சந்திர ராமவன்னி, வர்த்தகர் சங்கத் தலைவர் பா.ஜெகதீசன், மன வளக்கலை பேராசிரியர் தரணி முருகேசன், ராமேஸ்வரம் தீவு செய்தியாளர்கள் மன்றத் தலைவர் அ.அசோகன், செயலர் ஆர்.மோகன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ராமநாதபுரம் செய்தியாளர் சங்கப் பொருளாளர் பி.மகேஸ்வரன் நன்றி கூறினார்.

செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் ம.கயிலைச்செல்வம் (செய்தி), காவல் தனிப் பிரிவு சார்பு ஆய்வாளர் ஜெயக்குமார், ரோட்டரி சங்கத் தலைவர் பொறியாளர் கே.எம்.காந்தி, ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஐஸ்வர்யா சுப்பு, வழக்கறிஞர்கள் முனியசாமி, சோமசுந்தரம், ஆடிட்டர் கார்த்திகேயன், இன்னர் வீல் சங்கத் தலைவி கவிதா செந்தில்குமார், சமூக ஆர்வலர் சுப. மங்களநாத சேதுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் செய்தியாளர்கள் சங்க நிர்வாகிகள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் விழா ஏற்பாடுகளை செய்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!