இராமநாதபுரத்தில் ஜூன் 21ல் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கு – மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தகவல்…

இராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் குழந்தைகள் உரிமைகள், பாதுகாப்பு சிறப்பு கருத்தரங்கு ஜூன் 21ல் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவ ராவ் கூறியதாவது:  தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பாக குழந்தைகள்  உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான சிறப்பு அமர்வு தேசிய அளவில் 8 மாநிலங்களை தேர்வு  செய்துள்ளது. அதில் தமிழகத்தில் 10 மாவட்டங்களை உள்ளடக்கி ராமநாதபுரம்  மாவட்டத்தை தலைமை இடமாக தேர்வு செய்து ஜூன் 21 காலை 9 மணியளவில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இந்த அமர்வு நடைபெற உள்ளது. இந்த அமர்வில் ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, மதுரை, நெல்லை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், தூத்துக்குடி, தேனி ஆகிய 10 மாவட்டங்களின் சிறப்பு அதிகாரிகள் மற்றும்  குழந்தைகள் நலன் சார்ந்த பல்வேறு துறை அலுவலர்கள் அமர்வில் கலந்து கொள்கின்றனர். குழந்தைகளின்  உரிமை மீறல் சம்பந்தமான பிரச்னைகள், பாதுகாப்பு சார்ந்த பிரச்னைகள், பள்ளி  இடைநிற்றல் குழந்தை, உடல் ரீதியான தண்டனைக்கு உள்ளான குழந்தை மற்றும்  பாதிக்கப்பட்ட குழந்தைக்கு இழப்பீட்டுத் தொகை பெறுவது போன்ற குழந்தைகளின் உரிமை  மீறல் தொடர்பான பிரச்னைகளை பொதுமக்கள் மற்றும் பெற்றோர், குழந்தைகள்  ஆகியோர் அமர்வில் கலந்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்து  கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..