இராமநாதபுரத்தில் ரெட் கிராஸ் சார்பில் ரத்த தான முகாம்..

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட கிளை, ஆரோக்யா மருத்துவமனை மற்றும் ராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலைய நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து நடத்திய ரத்ததான முகாம், இராமநாதபுரம் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்றது

முதல்வர் எஸ். ரமேஷ் குமார் தலைமை வகித்தார். ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம் முன்னிலை வகித்தார். பயிற்சி அலுவலர் சண்முகநாதன் வரவேற்றார்.  ரெட் கிராஸ் ராமநாதபுரம் மாவட்ட பொருளாளர் சி.குணசேகரன் பசுமை ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் ஏ.மலைக்கண்ணன் தொழிற்பயிற்சி நிலைய ஆசிரியர்கள் திராவிடமணி முத்து ஆகியோர் ரத்த தான அவசியம் பற்றி உரையாற்றினார்.

இராமநாதபுரம் ஆரோக்யா மருத்துவமனை முதன்மை மருத்துவர் ரெட் கிராஸ் புரவலர் ஆர். பரணிக்குமார் ரத்த தானம் செய்தோரை பாராட்டி முகாமை துவக்கி வைத்தார். இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துமனை ரத்த வங்கி டாக்டர் ஞானக்குமார் தலைமையில் அவரது குழுவினர் இளநிலை பயிற்சியாளர் சந்திரசேகரன் மற்றும் மாணவர்கள் 46 பேரிடம் ரத்தம் சேகரித்தனர். பயிற்சி அலுவலர் சின்ன குப்புசாமி நன்றி கூறினார்.

இந்தியன் ரெட் கிராஸ் ராமநாதபுரம் மாவட்ட ரத்த தான பிரிவு தலைவர் ஆசிரியர் எஸ். அய்யப்பன் தலைமையில் தொழிற்பயிற்சி நிலைய ஆசிரியர்கள் சேதுகார்த்திக், ஜெயபிரசாத், பிரபாகரன், சாருமதி ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்தனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..