Home செய்திகள் BEST 2020 IDEAS FOR THE BEST 2020 INDIA – திறமையாளர்களை அடையாளம் காண ஒரு சிறப்பு திட்டம்…

BEST 2020 IDEAS FOR THE BEST 2020 INDIA – திறமையாளர்களை அடையாளம் காண ஒரு சிறப்பு திட்டம்…

by ஆசிரியர்

வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மையம் மற்றும் A.P.J.அப்துல் கலாம் பன்னாட்டு அறக்கட்டளை இணைந்து BEST 2020 IDEAS FOR THE BEST 2020 INDIA எனும் திறமையாளர்களை அடையாளம் காணும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்கள். இன்று 29/5/2019 முகவை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கொ.வீரராகவராவ்,I.A.S மற்றும் திரு.பத்மஸ்ரீ.K.கார்த்திகேயன்,I.P.S ஆகியோர் இத்திட்டத்தை இன்று (29/05/2019) இராமேஸ்வரத்தில் துவங்கிவைத்தார்கள். வில் மெடல்ஸ் நிறுவனர் & தலைவர் Dr.கலைவாணி மற்றும் முதன்மைச்செயலர் Dr.தஹ்மிதா பானு ஆகியோர் இத்திட்டம் பற்றிய விளக்கத்தை எடுத்துக்கூறினார்கள்.

இந்த BEST 2020 IDEAS FOR THE BEST 2020 INDIA முயற்சியானது WILL MEDAL OF WORLD RECORDS மற்றும் Dr.A.P.J.ABDUL KALAM INTERNATIONAL FOUNDATION இணைந்து செய்யும் வித்யாசமான முயற்சி ஆகும். 2020ஆம் ஆண்டு நம்முடைய இந்தியாவானது சிறந்த இந்தியாவாக உருவாவதற்கு வித்தியாசமான புதுமையான 2020 யோசனைகளை இந்தத் திட்டமானது வரவேற்கிறது.

இதில் யார் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் உங்களுடைய சிறப்பான இந்தியா உருவாவதற்கான யோசனையை தெரியப்படுத்தலாம்.

உங்களுடைய சிறந்த யோசனைகளை whatsapp, இமெயில், குறுந்தகவல், தபால் வழியாக எங்களுக்கு தெரியப்படுத்தலாம். யோசனைகளை தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ 200 வார்த்தைகளுக்கு மிகாமல் அனுப்ப வேண்டும். இந்த திட்டம் சம்பந்தமான மேல் விபரங்களுக்கு 7010145202 / 9047811615 என்ற அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இத்திட்டத்திற்கான படைப்புகள் மற்றும் யோசனைகள் வந்துசேர வேண்டிய கடைசி நாள் 31/12/2019 என அறிவிக்கப்பட்டுள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!