தேனி மற்றும் விழுப்புரம் பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் வெற்றி கொண்டாட்டம்…

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்ற பொதுத்தேர்தல் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வெற்றி பெற்றதை தொடர்ந்து பெரியகுளம் பகுதியில் உள்ள புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் விடுதலை சிறுத்தையினர் கொண்டாடினர்.

அதேபோல் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை ரவிக்குமார் வெற்றி பெற்றதை தொடர்ந்து   வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தும் கொண்டாடினர்.

அதே போல் தேனி மாவட்டத்தில் நடைபெற்ற பெரியகுளம் மற்றும் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த சரவணகுமார் மற்றும் மகாராஜன் ஆகியோருக்கு பெருவாரியாக வாக்களித்து வெற்றி பெறச் செய்த வாக்காளர்கள், மற்றும் பொது மக்களுக்கும் நன்றி தெரிவித்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சி சார்பில் வெற்றி பெற்ற அனைவருக்கும் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

பெரியகுளம் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேனிகிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமை வகித்தார். தமிழ்வாணன் தேனி பாராளுமன்ற தொகுதி செயலாளர் ஜோதி முருகன் பெரியகுளம் நகர செயலாளர், ஆண்டிபட்டி  ஒன்றிய செயலாளர், அரிமா ஜெ ரபீக், மாவட்ட பொருளாளர். உட்பட நிஜாம்,தளபதி, கருத்தையன், சிவநேசன், பாஸ்கரன்,சையது இப்ராஹீம், ஆண்டவன், தமிழ் பாண்டியன், இளமதி ,செல்வராஜ், மணிபாரதி,சுல்தான், ராஜீவ்காந்தி, திருமா சேகர், ஆற்றலரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

.A சாதிக்பாட்சா.நிருபர்.தேனி மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…