சிவகாசி பட்டாசு குடோனில் தீ விபத்து..

சிவகாசி அருகேயுள்ள நதிக்குடி பஞ்சாய்த்துக்குட்பட்ட சிங்கம்பட்டி கிராமத்தில் ஜெயசங்கர் என்பவர் சொந்தமான பட்டாசு இருப்பு வைக்கும் குடோன் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சிவகாசி பகுதியில் இயங்கி வரும் பட்டாசு கடைகளில் தீபாவளி நேரத்தில் வருவாய் துறையினர் ஆய்வு நடத்தி விதி மீறிய பட்டாசு கடைகளில் கைப்பற்றிய பட்டாசுகளை அங்கு இருப்பு வைத்து சில் வைத்துள்ளனர்.

இந்நிலையில் முறையாக பராமரிப்பு இல்லாமல் இருந்துள்ளது.  இந்நிலையில் இன்று மாலை இடி, மின்னல் காற்றுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த குடோனில் இடி, மின்னல் தாக்கியதில் அந்த குடோனிலுள்ள பட்டாசுகள் வெடித்து எரிய தொடங்கின. அருகிலுள்ள பட்டாசு ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் உடனடியாக மாரனேரி காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரியபடுத்திய பின் சிவகாசி தீயணைப்பு காவல் நிலையத்திலிருந்து இரண்டு வண்டி தீயணைப்பு வண்டியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். சம்பவம் குறித்து மாரனேரி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

August Issue…

August Issue…