Home செய்திகள் மதுரை மாவட்டம் மேலூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தென்னந்தோப்பில் பாயும் அவலம்… அலட்சியத்தில் அதிகாரிகள்..

மதுரை மாவட்டம் மேலூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தென்னந்தோப்பில் பாயும் அவலம்… அலட்சியத்தில் அதிகாரிகள்..

by ஆசிரியர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 2 மாதங்களுக்கு மேலாக வீணாக தென்னந் தோப்பில் பாயும் குடிநீர். உடைப்பை சரிசெய்யாமல் அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது குன்னாரம்பட்டி, மங்களாம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கிராமத்திற்கு குடிநீர் தேவைக்காக மேலூரிலிருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீரை குழாய் மூலம் கொன்டு சென்றனர். ஆனால் இந்த காவிரி கூட்டு குடிநீர் குழாய் இரண்டு கிராமங்களுக்கு செல்லும் வழியிலேயே உடைந்து சேதமாகி விட்டன. இதனால் அந்த கிராமத்திற்கு குடிநீர் செல்லாமல் அருகில் தென்னந்தோப்பிலேயே குடிநீர் வீணாகி ஆறாக பாய்கின்றன.

இது குறித்து இரண்டு கிராம மக்களும் சேர்ந்து அதிகாரிகளிடம் சரிசெய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகளோ இதுவரை சரிசெய்யாமல் அலட்சியமாக செயல் பட்டுவருகிறார்கள். குழாயில் உடைப்பு ஏற்பட்டு 2 மாதங்களும் இந்த கிராம மக்கள் அங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் நடந்து வந்து தென்னந்தோப்பில் வீணாகி பாயும் நீரையே தங்களின் தேவைக்கு எடுத்து செல்கின்றனர். அதிகாரிகள் உடனே உடைப்பு ஏற்பட்ட குழாயை சரிசெய்து இரண்டு கிராமங்களுக்கும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகமே குடிநீர் இல்லாமல் பரிதவித்து வரும் நிலையில் அதிகாரிகளின் அலட்சியபோக்கால் குழாயில் உள்ள உடைப்பை சரிசெய்யாமல் இருப்பது பொது மக்களிடையே வேதனை தருகிறது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!