Home செய்திகள் அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் அபாயகரமான அங்கன்வாடி மையம் ஆபத்தில் பச்சிளம் குழந்தைகள்…

அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் அபாயகரமான அங்கன்வாடி மையம் ஆபத்தில் பச்சிளம் குழந்தைகள்…

by ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைத் தாலுகா அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் பெருமாள் கோவில் தெருவில் மிகவும் ஆபத்தான அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இந்த அங்கன்வாடி மையமானது தமிழக அரசு அங்கன்வாடி திட்டம் கொண்டு வரப்பட்ட 1975-76 ஆண்டுகளில் கட்டப்பட்ட மிகவும் பழைமையான அங்கன்வாடி மையமாகும், இது சுண்ணாம்பு சுவராக கட்டபட்டு ஆஸ்பட்டாஸ் கூரை போடப்பட்டுள்ளது.

இந்த அங்கன்வாடி மையத்தில் பெருமாள் கோவில்த்தெரு, காளியம்மன் கோவில் த்தெரு, மேற்குத்தெரு,கடைவீதி, சந்தூர், கிழக்குத் தோட்டம் போன்ற பகுதிகளிலிருந்து 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2013-க்கு பின் ஐந்தாண்டுகளுக்கு மேலாக பராமறிப்பு இன்றி பழைய கட்டிடம் மற்றும் ஆஸ்பட்டாஸ் சீட்டுகள்  உடைந்து, ஓட்டை விழுந்து, சுவர்கள் பொரிந்து மழையினால் மழைநீர் ஒழுகி ஊரிப்போய் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

மேலும் இந்த அங்கன்வாடி மையத்தில் சமயல்கூடமும்,  பொருட்கள் வைக்கும் அறையும் கான்க்ரீட் சுவரால் அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் பெயர்ந்து போய் காண்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் வண்ணம் ஆபத்தான நிலையில் உள்ளது. பொருட்கள்  சேமிக்கும் அறையில் வெளியிலிருந்து பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் உள்ளே வரும்படி பொந்துகளும் உள்ளன.

மேலும் அங்கன்வாடியில் உள்ள குழந்தைகள் பயன்படுத்தும் கழிவறை, சுகாதாரம் என்பதே சுத்தமாக இல்லாமல் பாசானம் பிடித்து வழுக்கி விழும் நிலையிலும், சுற்றுச்சுவர் பெயர்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பெரும்பாலான பெற்றோர்கள் பாதுகாப்பு கருதி தங்கள் குழந்தைகளை இந்த அங்கன்வாடிக்கு அனுப்புவதை நிறுத்தி வருகின்றனர்.

எனவே மிகவும் பழமையான சிறு கோடை மழைக்கே  தாங்காத இந்த அங்கன்வாடி மையத்தை மிகப் பெரிய விபத்து ஏற்படும் முன் உடனடியாக இந்த கோடை விடுமுறையைப் பயன்படுத்தி போர்க்கால அடிப்படையில் மராமத்து செய்தோ அல்லது இந்த பழைய சுவரை இடித்துவிட்டு புதிய அங்கன்வாடி மையம் அமைத்து தர வேண்டும் என்பது இப்பகுதி தாய்மார்கள் பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!