Home செய்திகள் வத்தலகுண்டுப் பகுதியில் தேங்காய் விளைச்சல் அமோகம் ஆனாலும் விவசாயிகள், வியாபாரிகள் கடும் வேதனை ..

வத்தலகுண்டுப் பகுதியில் தேங்காய் விளைச்சல் அமோகம் ஆனாலும் விவசாயிகள், வியாபாரிகள் கடும் வேதனை ..

by ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான வத்தலக்குண்டு, அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி, விராலிப்பட்டி ஆகிய பகுதியில் பல ஆயிரக்கனக்கான ஏக்கர் தென்னை விவசாயம் செய்யப்பட்டு வருகின்றது, கடந்த சில ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவி வந்த நிலையிலும் சொட்டு நீர் பாசனம் போன்ற நவீன பாசனத்திட்டங்களை பயன்படுத்தி இப்பகுதியில் தென்னை மரங்கள் காப்பாற்றப்பட்டு தென்னை விவசாயம் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இந்தாண்டு புயல் போன்ற மழையினால் இப்பகுதியில் தேங்காய் விளைச்சல் சிறப்பாக உள்ளது ஆனாலும் விவசாயிகள் விபாரிகள் கடும் வேதனையில் உள்ளனர்

காரணம் இப்பகுதியில் விளையக்கூடிய தேங்காய்கள் கடந்தாண்டு டன் ஒன்று – 45,000 முதல் 50,000 வரை விற்பனை ஆனது இந்தாண்டு ஒரு டன் தேங்காயை 25.000 க்கூட விற்பனையாகவில்லை காரணம் கர்நாடகா, மஹாராஷ்டிரா , மத்திய பிரதேஷ் போன்ற வெளி மாநில வியாபாரிகள் தான் அதிக அளவில் பல நூறு டண் தேங்காய்களை வாங்கி செல்வர் ஆனால் இந்தாண்டு லாரி வாடகை மற்றும் இதர செலவுகள் உயர்வால் ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதாலும் அந்த பகுதியில் கொள்முதல் செய்வதற்கும் ஏற்றுமதி செல்வதற்கும் செலவு குறைவு என்பதாலும் அதிகமான வெளி மாநில வியாபாரிகள் அந்தமாநிலங்களில் கொள்முதல் செய்வதால் வத்தலக்குண்டு பகுதியில் தேங்காய்கள் தேக்கம் ஏற்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கின்றது இதனால் இப்பகுதி விவசாயிகள் வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் கடும் வேதனையில் உள்ளனர்

மேலும் விவசாயிகள் அனைவரும் சொட்டு நீர் பாசனம் போன்ற நவீன மேலாண்மையை கையாண்டு விவசாயம் செய்து வருவதால் இடுபொருள் முதல் பராமரிப்பு செலவு வரை செலவுகள் கூடுதலாக ஆன போதும் இது போன்ற பெரும் நஷ்டம் தென்னை விவசாயிகளை கடனிலும் தள்ளியுள்ளது

மேலும் தேங்காய்கள் தென்னந்தோப்புகளில் தேக்கம் ஏற்பட்டு அழுகியும் முளைத்தும் வீனாக போகாமல் இருக்க மிகக் குறைந்த விலையானாலும் தேங்காய் ஆயில் எடுப்பதற்காக காங்கேயம், தாராபுரம் போன்ற பகுதிகளில் உள்ள தேங்காய் பருப்பு ஆலைகளுக்கு கிலோ – 80-90 என தேங்காயை உறித்து அனுப்பி வருகின்றனர்

இதனால் இப்பகுதியில் அதிகமான தென்னை விவசாயம் செய்வதாலும் விவசாயம் தேங்காய் விளைச்சல் உள்ளதால் தமிழக அரசே தேங்காய் கொள்முதல் நிலையம் அமைத்து குறைந்தது ஆதர விலை அமைத்து ஏற்றுமதிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என தென்னை விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!