குஜராத்தில் ஹர்திக் பட்டேலுக்கு திடீரென கன்னத்தில் பளார் விட்டதால் பரபரப்பு..

குஜராத்தில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், விவசாயக்கடன் தள்ளுபடி, கல்வியில் முன்னுரிமை என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களை ஒன்று திரட்டி ஹர்திக் படேல் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்.

இவரால் நடத்தப்பட்ட இந்த போராட்டத்திற்கு பட்டேல் சமூகத்தினர் பெருமளவு ஆதரவு தெரிவித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் அரசியலில் ஈடுபாட்டின் காரணமாக ஹர்திக் படேல் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

மக்களவை தேர்தல் நடைபெற்று வருவதால், காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு குஜராத் மாநிலம் சுரேந்தர் நகரில் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் அவர் பேசிக் கொண்டிருந்த போது மேடை மீது ஏறிவந்த ஒரு நபர் ஹர்திக் பட்டேல் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

கன்னத்தில் அறைந்தவரை அங்கிருந்த தொண்டர்கள் அடித்து உதைத்தனர். திடீரென கன்னத்தில் அறைந்த இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..