12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகமதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகள்..

தமிழகத்தில் 2697 மாற்றுத்திறனாளிகள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளிகளில், 2404 பேர் பொதுத் தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளனர்.இது வழக்கமான தேர்ச்சி விகிதத்தை விட அதிகமாகும். தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்த பொதுத் தேர்வினை 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் எழுதினர்.  தமிழகத்தில் மொத்தம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுவை சேர்த்து மொத்தம் 2697 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். விழி மாற்றுத்திறனாளிகள் உட்பட பலர் இந்த தேர்வை எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 19.04.19 இன்று வெளியான, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வு முடிவில் மொத்த தேர்ச்சி விகிதம்- 91.03% மாணவிகள் தேர்ச்சி- 93.64% மாணவர்கள் தேர்ச்சி- 88.57%, வழக்கம் போல மாணவர்களைவிட மாணவிகள் 5.07% அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இதில் மொத்தம் 2404 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். மாற்றுத்திறனாளிகள் பலர் பொது தேர்வெழுதி அதில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ள நிலையில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..