பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க ஆலோசனை கூட்டம்..

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் அறிவுரையின்படி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் காவல் துணை ஆணையர் திரு. சசிமோகன் IPS., (சட்டம் மற்றும் ஒழுங்கு), காவல் துணை ஆணையர் திரு. செந்தில்குமார் TPS., (குற்றப்பிரிவு) , காவல் துணை ஆணையர் திரு. மகேஷ் IPS., (தலைமையிடம்), காவல் துணை ஆணையர் திரு. அருண்பாலகோபாலன் IPS., (போக்குவரத்து), காவல் துணை ஆணையர் திரு.முருகேசன் TPS.,(ஆயுதப்படை) மற்றும் மதுரை மாநகர காவல் அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

காவல் ஆணையர் இக்கூட்டத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான இழைக்கப்படும் பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காக மதுரை மாநகரில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உத்தரவிட்டார். மேலும் பாலியல் தொந்தரவு தொடர்பாக புகார்கள் வந்தால் உடனடியாக வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை விரைவில் கைது செய்து அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து கடுமையான தண்டனை வாங்கி கொடுக்கவேண்டும் என்றும் கலந்தாய்வு கூட்டத்தில் உத்தரவு பிறப்பித்தார்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..