Home செய்திகள் இராமேஸ்வரம் கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை…

இராமேஸ்வரம் கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை…

by ஆசிரியர்

இந்திய உள்துறை அமைச்சக ஆணை படி இன்றும் (ஜன. 22), நாளையும் (ஜன.23) இந்திய கடலோர பகுதிகளில் சி- விஜில் ஆப்பரேஷன் நடை பெற்று வருகிறது. தனுஷ்கோடி, ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் கடல் பகுதிகள், தனுஷ்கோடி மணல் திட்டுகள் உள்ளிட்ட இராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்திய கடலோர காவல் படை, கடற்படை, மத்திய, மாநில பாதுகாப்பு ஏஜென்சிகள் தீவிர சோதனை யில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடலோரப் பகுதிகளில் பரபரப்பு காணப்பட்டது.

இந்நிலையில் தங்கச்சிமடத்தில் இருந்து 2 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மெரைன் போலீசார் ரோந்து பணி ஈடுபட்ட போது சங்தேகத்திற்கு இடமாக சென்ற விசைப்படகை விரைந்து சென்று மடக்கி பிடித்தனர். அதிலிருந்த ஏழு பேரை கைது செய்து விசாரித்ததில் பாம்பன் சாலைப்பாலம், இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வெடி குண்டு வைக்க முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதே போல் ராமேஸ்வரம் நகரில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த நான்கு பேரை பிடித்து விசாரித்தில் அவர்கள் குண்டு வைக்க வந்தது தெரிய வந்தது. இதையடுத்து 11 பேர் கைது செய்யப்பட்டு, மண்டபம் மெரைன் போலீசில் வைத்து விசாரித்தனர்.

பின்னர்  விசாரணையில், கைது செய்யப்பட்ட 11 பேரும் சென்னையில் இருந்து வந்த இந்திய கடற்படை, கமாண்டோ படை சேர்ந்தோர் என்றும், கடல் பகுதி பாதுகாவலர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க செய்யப்படும் ஒத்திகை என மெரைன் போலீசார் தெரிவித்தனர்.

மும்பை குண்டு வெடிப்பு நடைபெற்று 10 ஆண்டுகளுக்கு பின் தேசிய அளவில் நடைபெறும் சி- விஜில் ஆப்பரேஷன் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.  ஆண்டுக்கு ஒரு முறை இந்திய உள்துறை அமைச்சகம் இது மாதிரியான ஆப்பரேஷனை நடத்தி பாதகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதே போல நடப்பாண்டில் இன்று (22/01/2019) தொடங்கிய சி- விஜில் ஆப்பரேஷன் நாளை (23/01/2019) மாலை வரை தொடரும். கடலோர பகுதிகளில் யாரேனும் அந்தியர் தென்பட்டால் தகவல் கொடுக்க மீனவர்களிடம் வேண்டுகோள் விடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!