பழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் பலி..

திண்டுக்கல் மேற்கு வட்டம், சிந்தலக்குண்டு கிராமம், காமாட்சிபுரம் பகுதி பழனி – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் இன்று பிற்பகல் 4 மணியளவில் திண்டுக்கல்லில் இருந்து திருப்பூர் செல்லும் சிறப்பு பேருந்து (TN57 N 1815) மீது, பழனியில் இருந்து திண்டுக்கல் வழியாக ராமநாதபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்த 2 பயணிகள் மஹிந்திரா மினி மகிழுந்து வாகனங்களும் ( TN65 M 8473, TN36 K 2273 ) மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மகிழுந்தில் பயணம் செய்த ஒரு பெண், ஒரு ஆண் என இருவர் சம்பவ இடத்தில் பலியானார். மேலும் 50 க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தாடிக்கொம்பு காவல் நிலையத்தார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

July Issue…

July Issue…