வத்தலக்குண்டு அருகே குடும்ப தகராறில் விவசாயி குத்தி கொலை விலக்க சென்ற நான்கு பேர் காயம் மைத்துனர் கைது..

வத்தலக்குண்டு அருகே குடும்ப தகராறில் விவசாயி குத்தி கொலை செய்யப்பட்டார். அதில் விலக்க சென்ற நான்கு பேர் காயமடைந்தனர். கத்தியால் குத்திய மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே குன்னூத்துப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் வயது 45 விவசாயி, இவர் அதே ஊரைச்  சேர்ந்த  விவசாயி தொத்துக்காளையின்  (வயது 32) சகோதரி செல்வியம்மாளை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஆண் 1, பெண் 1 இரண்டு குழந்தை உள்ளது. செல்வத்துக்கும் தொத்துக்காளைக்கும் குடும்ப தகராறு இருந்து வந்தது. செல்வியம்மாள் தம்பி தொத்துக்காளை வீட்டில் இருந்தார். இந்நிலையில் அங்கு சென்ற செல்வத்திற்கும் தொத்துக்காளைக்கும் வாய் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. ஆத்திரமடைந்த செல்வம் கத்தியால் தொத்துக்காளையை வயிற்று பகுதியில் குத்தினார். அப்போது அங்கிருந்த அவரது உறவினர்கள் முத்துப்பிள்ளை, வெள்ளையம்மாள், செல்வியம்மாள், பேச்சி ஆகியோர் தடுத்தனர். அதில் படுகாயமடைந்த தொத்துக்காளை சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த நான்கு பேரும் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று தேனி க.விளக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலியான தொத்துக்காளைக்கு மூன்று ஆண் குழந்தைகள் உண்டு. விருவீடு சப்இன்ஸ்பெக்டர் கண்ணாகாந்தி செல்வத்தை கைது செய்து மேலும் விசாரணை செய்து வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..