வாலாஜா பேட்டையில் பள்ளி மாணவன் விபத்தில் பலி ..

வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டை பாரதி தெருவை சேர்ந்தவர் ஜீவா உடைய மகன் ஷாம் இவர் ஆற்காடு பகுதியில் உள்ள செட்டியார் மேல்நிலைப்பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  வாலாஜாபேட்டையில் இருந்து பேருந்து வாயிலாக ஆற்காடு செல்லும் இவர் இன்று (11/01/2019)  பள்ளியில் அரசு மிதிவண்டி வழங்குவதால் காலை பேருந்தில் சென்ற அவர் இலவச மிதிவண்டி பெற்றுக்கொண்டு ஆர்காடு மேம்பாலம் வழியாக வாலாஜா சென்றுகொண்டிருந்தபோது அதிவேகமாக பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் ஷாம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருடன் வந்த மற்றொரு மாணவன் சிறு காயங்களுடன் வாலாஜாபேட்டை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் விபத்து குறித்து ராணிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ஆற்காடு ராணிப்பேட்டை இணைப்பு பாலத்தில் ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செய்தி:- வாரியார், வேலூர்

Be the first to comment

Leave a Reply