Home செய்திகள் எந்த பிரச்சினைகளையும் சந்திக்க பெண்கள் தைரியத்துடன் இருக்க வேண்டும் :பாலின உணர்திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தூத்துக்குடி S P முரளி ரம்பா பேச்சு..

எந்த பிரச்சினைகளையும் சந்திக்க பெண்கள் தைரியத்துடன் இருக்க வேண்டும் :பாலின உணர்திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தூத்துக்குடி S P முரளி ரம்பா பேச்சு..

by ஆசிரியர்

தூத்துக்குடி ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்ற பாலின உணர்திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அவர் ஆற்றிய சிறப்புரையில் சுற்றுச்சூழல் சுகாதாரம் மன ஆரோக்கியம், தீர்வு மற்றும் கலாச்சார நெறி முறைகளை பின்பற்றுதல் போன்றவை குறித்தும் பெண்களுக்கான கல்வி முக்கியத்துவம் மற்றும் நிதி சுதந்திரம் பற்றியும் போக்கோ சட்டம், குடும்ப வன்முறை பாதுகாப்பு சட்டம், மற்றும் வரதட்சணை கொடுமை சட்டம், பற்றியும் பெண்களின் பாதுகாப்புக்கு என இலவச தொடர்பு எண் (1091) TOLL FREE தொலைபேசி உள்ளது பற்றியும் பெண்களுக்கு பிரச்சினை ஏற்படும்போது இந்த எண்ணிக்கை அல்லது மாவட்ட காவல்துறையில் இயங்கிவரும் ஹலோ போலீஸ் அலைபேசி மற்றும் whatsapp 95141 44100 என்ற எண்ணிக்கை தகவல் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்விவரித்தார்.

மேலும் எந்த வகையான பிரச்சினைகளையும் சந்திப்பதற்கு மன தைரியத்துடன் இருக்க வேண்டும் என்று மாணவிகளை ஊக்கப்படுத்தினார் அவர் விளக்கமளித்து பேசிய பின் பின் மாணவிகள் தங்கள் சந்தேகங்களை கேட்க அதற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா பதிலளித்தார்.

நிகழ்ச்சியில் ஏபிசி மகாலட்சுமி கல்லூரி முதல்வர் முனைவர் சத்தியபாமா அவர்கள் வரவேற்புரையாற்றினார், பின்னர் உள் தர கட்டமைப்பு குழு உறுப்பினர் பேராசிரியர் சியாமளா நன்றியுரையாற்றி விழாவை நிறைவு செய்தார் இவ்விழாவில் கல்லூரி மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!