Home செய்திகள்கீழக்கரை செய்திகள் திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவு கிராமத்தில் பிளாஸ்டிக் முட்டையா?.. போலீஸ் விசாரனை..

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவு கிராமத்தில் பிளாஸ்டிக் முட்டையா?.. போலீஸ் விசாரனை..

by ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவு என்ற கிராமத்தில் பிளாஸ்டிக் முட்டை விற்பனை செய்யப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது, இதே கிராமத்தை சேர்ந்த திருமதி விக்டோரியா சின்னப்பராஜ் என்பவர் கடைக்கு சென்று முட்டை வாங்கியுள்ளார். தான் பயன்படுத்தியது போக  மீதம் இருந்த முட்டைகளை பிரிட்ஜில் வைத்துவிட்டு இன்று காலை  பயன்படுத்துவதற்காக எடுத்த அந்த முட்டையில் மாற்றம் இருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றார். அந்த முட்டை பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட முட்டை என்றும்  சாதாரண முட்டைக்கும் அந்த பிளாஸ்டிக் முட்டைக்கும் வித்தியாசம் தெரிவதாக அக்கம் பக்கத்தினரிடம் சொல்லியிருக்கிறார்.

பின்பு முட்டையை விற்பனை செய்த கடை காரரிடம் சென்று  கேட்டபோது அவர் தனக்கு ஒன்றும் தெரியாது என்றும்  முட்டையை  மொத்த வியாபாரியிடம் வாங்கியதாகவும் கூறியிருக்கிறார். எனவே, அந்த மொத்த வியாபாரியிடம் எப்படி இந்த பிளாஸ்டிக் முட்டை வந்தது என்றும் இந்த பிளாஸ்டிக் முட்டைகள் எங்கே தயாரிக்கப் படுகிறது என்பதையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!