பரமக்குடி டாக்டர்.சுரேஷ் மெட்ரிக் பள்ளியில் அறிவியல் மற்றும் மூலிகை கண்காட்சி ..வீடியோ..

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி டாக்டர் சுரேஷ் மெட்ரிக்., பள்ளியில் மாணவர்களால் நடத்தப்பட்ட அறிவியல் மற்றும் நாட்டு மூலிகை செடி கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் (பொறுப்பு) ராமர் துவக்கி வைத்தார். இதில் ஏராளமான மாணவர்களின் படைப்புகள் இடம் பெற்றன. மின் ஏற்றி, மின் படிக்கட்டு, விவசாயத்தில் சொட்டு நீர் பாசன முறை, தானியங்கி பாதுகாப்பு கருவிகள், பாரம்பரிய கலாசார விழாக்கள் பற்றிய மாதிரிகள் மற்றும் நாட்டு மூலிகைகளான துளசி, நாயுருவி கற்றாளை, ஆடாதொடை 5 நில வேம்பு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு மருத்துவ குணமுடைய மூலிகை செடிகள் அடங்கிய கண்காட்சியை சிறப்பாக அமைத்திருந்தனர்.

இந்த கண்காட்சியை ஏராளமான மாணவர்கள், பெற்றோர்க பார்வையிட்டனர்.கண்காட்சியை சிறப்பாக அமைத்த மாணவர்கள், உறுதுணை புரிந்த பள்ளி முதல்வர், ஆசிரிய, ஆசிரியைகளை பள்ளி தாளாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் சுந்தரராஜன் பாராட்டினார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..