அரசு டவுன் பஸ் நிறுத்தம் மாணவர்கள் பரிதவிப்பு..

இராமநாதபுரம் மாவட்டம்  கமுதி முதல் பம்மனேந்தல், கீழ்க்குடி வழித்தடங்களில் தினமும் 10 முறை சென்று வரும் அரசு டவுன் பஸ் கடந்த 2 நாளாக இயங்கவில்லை,இதனால் கமுதி தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பள்ளி செல்ல இயலாத நிலை நீடிக்கிறது. கமுதி அருகே பம்மனேந்தல், கே.வேப்பங்குளம், குண்டுகுளம், ஒழுகு புலி, வண்ணாங்குளம், பூமாவிலங்கை, சீமானேந்தல், செந்தனேந்தல், சோளாண்டி, அரிசிக்குழுதான கிராமங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கமுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்துவருகின்றனர்.

தினமும் வரும் அரசு டவுன் பஸ் முன்னறிவிப்பின்றி திடீரென நிறுத்தப்பட்டதால் மாணவர்கள், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். இது குறித்து கமுதி அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளார் தனபாலிடம் கேட்ட போது வாகைக்குளம், புரசலூர் பகுதி மாணவர்கள் பஸ்சிற்குள் கடந்த 2 நாட்களுக்கு முன் மோதினர். இதனால் பஸ் இயக்கப்படவில்லை. இப்பிரச்சனை சமரசம் ஏற்பட்டதும் பஸ் மீண்டும் இயக்கப்படும் என்றார். கமுதி தனியார் பள்ளி மாணவிகள் சிலர் கூறுகையில் முன்னறிவிப்பின்றி அரசு டவுன் பஸ் நிறுத்தப்பட்டதால் 2 நாளாக பள்ளிக்கு செல்லமுடியவில்லை. எங்கள் நலன் கருதி பஸ்சை மீண்டும் இயக்கவேண்டும் என்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.

Be the first to comment

Leave a Reply