தேனி பெரியகுளத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக அம்பேத்கர் நினைவு தினம்..

தேனி பெரிய குளத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 62வது நினைவு நாளை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ப.நாகரத்தினம் தலைமையில் , ஒன்றிய செயலாளர் மு.ஆண்டி, நகர செயலாளர் அ.ஜோதி முருகன், தொகுதி துணை செயலாளர் மூ.ஆண்டவர், ஒன்றிய பொருளாளர் சையது இப்ராஹிம், மாவட்ட அமைப்பாளர் கள்ளி சேகுவாரா, பேரூர் செயலாளர் இரமேசு ஆகியோர் முன்னிலையில் கருஞ்சட்டை அணிந்து வீரவணக்க அணிவகுப்பு மேற்கொண்டு பெரியகுளத்தில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் இளமதி, கனி மனோகரன், அன்பு வடிவேல், செல்லதம்பி, பாஸ்கரன், தளபதி, கருத்தையன், கிறிஸ்டோபர், வீர பிச்சை, பரஞ்சோதி, வீர தெய்வம்,நாகராஜ், ஜாபர் சேட் , திருமா சேகர், பிரசாத், முத்துசாமி, காளிதாஸ்’இராவண வரதன், வெற்றிவேல், செல்லையா, செல்லமணி, தமிழருவி , இராமகிருஷ்ணன் , செல்வம், செல்வராஜ்,விடுதலை செல்வா, எழச்சிமுத்து, ராஜ்குமார், பாண்டி, திருமா ராமா’ ஆற்றலரசு, திருமா மணி, விக்னேஷ், செல்வம், உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர். சாதிக் பாட்சா , நிருபர், தேனி மாவட்டம்.

To Download Keelainews Android Application – Click on the Image

August Issue…

August Issue…