மக்களின் குறைகளை கேட்க வந்த பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை – செய்தியாளர் சந்திப்பு..வீடியோ செய்தி..

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா பகுதிகளில் மக்களின் குறைகளை கேட்க வந்த பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை  செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, “மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது காரணம் உச்சநீதிமன்றம் தெளிவாக சொல்லி இருக்கிறது காவேரி பகுதியில் எந்த ஒரு அணை கட்டுவதாக இருந்தாலும் மற்ற மாநிலங்களில் ஒப்புதல் தந்தால்தான் கட்ட முடியும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. பாரதிய ஜனதாக் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் வரும் பாராளுமன்றத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு தமிழகத்திற்கு துரோகம் செய்கிறது. பெங்களூருக்கு குடி தண்ணீர் தேவையென்றால் கிருஷ்ண சாகர் அணையில் இருந்து தண்ணீர் எடுத்து செல்லலாம் இதற்காக 5 ஆயிரம் கோடி செலவில் புதிய அணை கட்டுவதாக கூறி தமிழகத்தை வஞ்சிக்கிறது. கண்ணம்பாடி அணையில் இருந்து 14 டிஎம்சி தண்ணீர் பெங்களூர் குடிநீருக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது எனவே தமிழகத்தை வஞ்சிப் அதற்காகவே இந்த அணையை கட்ட முயற்சி செய்கிறது.மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் பொதுவான இடமாகிய ஒகேனக்கல் பகுதியில் அணை கட்டுவது உகந்ததாக இருக்கும்” என்று கூறினார்.

செய்தியாளர்: ரமேஷ்

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..