Home செய்திகள் கரை கடந்த கஜா புயல்… பாதித்த மக்களுடன் கரம் கோர்த்த கடலோரக் காவல் படை…

கரை கடந்த கஜா புயல்… பாதித்த மக்களுடன் கரம் கோர்த்த கடலோரக் காவல் படை…

by ஆசிரியர்

சமீபத்தில் தாக்கிய கஜா புயல் கரையை கடந்த பொழுது திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை , நாகபட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் பலர் தங்கள் வீடு, உடமைகள் இழந்து நிர்கதியாகினர். விளை நிலங்களில் தென்னை மரங்கள் வேரூ டன் சாய்ந்தன. பயிர்கள் நாசமாயின. புயல் தாக்கத்தால் பாதிப்பிற்குள்ளான கிராம மக்களுக்கு இந்திய கடலோரக் காவல் படை(மண்டபம் நிலையம்)யினர் தங்கள் சொந்த நிதியில் இருந்து நிவாரண உதவி வழங்கினர்.

மாநிலம் முழுவதிலும் இருந்து அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபதிபர்கள், சமூக அமைப்புகள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன. இவர்களுடன், இந்திய கடலோர காவல் படையினரும் நிவாரண உதவிகள் வழங்குவதில் கரம் கோர்த்தனர். இயற்கை சீற்றங்களான புயல், வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மீட்புப் பணிகளில் நாட்டின் பாதுகாப்பு பிரிவில் ஓரங்கமான இந்திய கடலோரக் காவல் படை தங்களை ஈடுபடுத்தி கொள்வது வழக்கம். இதனை தொடர்ந்து 16.11.2018 நள்ளிரவு வீசிய கஜ புயலின் போது ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து புயல் குறித்து கடலோரப் பகுதி மக்களிடம் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர். கடலில் சென்று புயல் அபாயம் குறித்து மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து கரை திரும்புமாறு அறிவுறுத்தியதுடன் மீட்பு பணிகளுக்கு ஆயத்தமாக இருந்தனர். ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் 1,500-க்கும் மேற்பட்ட படகுகளை மாவட்ட நிர்வாகம், ரயில்வே நிர்வாகத்துடன் சேர்ந்து பாம்பன் பாலம் வழியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு வந்து உதவினர். இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான விசைப்படகுகள் சேதத்தின் பிடியில் இருந்து பாதுகாக்கப்பட்டதாக கமாண்டிங் அதிகாரி எம் வெங்கடேசன் பெருமிதத்துடன், கடலோரக் காவல் படை வீரர்களை பாராட்டினார்.

இதையடுத்து, கஜ புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு உடமைகளை இழந்து யாதும் அற்றவர்களான புதுக்கோட்டை மாவட்டம் கணேசபுரம், மல்லிப்பட்டினம், சேதுபாவா, விளாங்குளம், செந்தில் பாளையம், பிள்ளையார்குளக்கரை, மனோரா , அடைக்கத் தேவன், எஸ்.ஆர்.பட்டினம் கிராமங்களில் இந்தியக் கடலோர காவல் படையினர் தங்கள் சொந்த நிதியிலிருந்து 555 கிலோ அரிசி, 100 கிலோ சர்க்கரை, 50 கிலோ பருப்பு, 2,500 பிஸ்கட் பாக்கெட்கள், தண்ணீர் பாக்கெட் 1000 , மெழுகுவத்தி ஆகிய நிவாரணப் பொருட்கள் வழங்கினர். நிவாரண பொருள் வழங்கும் பணியில் கமாண்டிங் அதிகாரி எம்.வெங்கடேசன் அறிவுறுத்தலில் மண்டபம் கடலோரக் காவல் படை அதிகாரி சங்கர் ராஜூ ஒருங்கிணைத்தார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!