வைகை அணையில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது..வீடியோ…

மதுரை  வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்னதையடுத்து வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.  இதனால் யானைக்கல் கல்பாலம் கீழே தண்ணீரானது அந்த பாலத்தை கடந்து செல்லும் வகையில் ஆர்ப்பரித்து கொண்டு சென்றிருக்கின்றது.

எனவே மாவட்ட நிர்வாகம் தரப்பில் முன்னேற்பாடுகளாக அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனம் எதுவும் அனுமதிக்கப்படவில்லை.. ஐந்துக்கும் மேற்பட்ட jcb இயந்திரங்களை வைத்து அப்பகுதியில்  முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது..

வைகை ஆற்றில் இரண்டு கரை ஓரங்களிலும் தண்ணீரானது அதிகமாக ஆர்ப்பரித்து கொண்டு சென்று இருப்பதால் மதுரை மாவட்ட நிர்வாகம் தரப்பில் இரண்டு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரை செய்தியாளர்: பெரியதுரை

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..