இன்று புதுச்சேரி விடுதலை பெற்ற நாள்.. ஒரு பார்வை..

இந்தியாவின் மற்ற பகுதிகள் எல்லாம் ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நிலையில் புதுவை பகுதி மட்டும் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் தொடர்ந்து புதுவை பிரெஞ்சு ஆட்சியின் கீழே செயல்பட்டு வந்தது.

பின்னர் 1954-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி பிரெஞ்சு ஆட்சியின் கீழ் விடுதலை பெற்று புதுவை மாநிலம் இந்தியாவோடு இணைந்தது. இந்த நாளை புதுவை விடுதலை நாளாக அரசு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறது.

அதன்படி இன்று புதுவை விடுதலை நாள் விழா புதுவை கடற்கரை சாலை காந்தி திடலில் இன்று காலை நடைபெற்றது. விழாவில் முதல்- அமைச்சர் நாராயணசாமி தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து போலீசார் மற்றும் மாணவ- மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதையடுத்து புதுவை மூடும் விழாக்கோலமாக ஜொலிக்கிறது

புதுவை விடுதலை நாளையொட்டி இன்று அரசு விடுமுறை அளிக்கப்பட்டது.

கே.எம்.வாரியார், வேலூர் மாவட்ட செய்தியாளர்

To Download Keelainews Android Application – Click on the Image

July Issue…

July Issue…