Home செய்திகள்கீழக்கரை செய்திகள் பயின்ற பள்ளிக்கு நிழல் கொடுத்த முன்னாள் மாணவர்கள் ..

பயின்ற பள்ளிக்கு நிழல் கொடுத்த முன்னாள் மாணவர்கள் ..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் மரைக்காயர்பட்டினம் துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் இங்குள்ள மர நிழலில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு வந்தனர். அப்போது மரக்கிளைகளில் கூடும் காகம், குருவி உள்ளிட்ட பறவைகளின் இன்னல்களுக்கு ஆளாகினர். மாணவர்களின் நலனில் அக்கறை காட்டிய தலைமை ஆசிரியர் பொன். ரவிச்சந்திரன் இது குறித்து ஆசிரியர் பாலசுப்ரமணியனிடம் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து கிராமக் கல்வி, பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் மரைக்காயர்பட்டினம் துவக்கப்பள்ளியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவர் முகமது கானிடம் எடுத்து கூறினர். முகமது கான் சீரிய முயற்சியால், இப்பள்ளி முன்னாள் மாணவர் செய்யது காதிர் (மலேசியால் வேலை செய்கிறார்) பள்ளி முகப்பில் மேற்கூரை, தரை தளம் அமைத்து தர ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். முகமது கான், செய்யது காதிர் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க மலேசியா தீன் ஜூவல்லரி உரிமையாளர்  ரூ.50,000 மதிப்பில் முகப்பு மேற்கூரை, தளம் அமைத்து கொடுத்தார்.

இதனால் இது நாள் வரை மரத்தடியில் மதிய உணவு சாப்பிட்டு வந்த மாணவர்களுக்கு மேற்கூரை நிழல் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என தலைமை ஆசிரியர் பொன். ரவிச்சந்திரன், ஆசிரியர் பாலசுப்ரமணியன் நெகிழ்ந்தனர். மேற்கூரை, தரைத்தளம் அமைய உறுதுணையாக நின்ற கஸ்டம்ஸ் (ஓய்வு) ஜனாப்.காதர், ஜமாத் பொறுப்பாளர்களுக்கு பள்ளி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!