Home சமையல் அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நெல் நேரடி கொள்முதல் நிலையம் திறப்புவிழா-விவசாயிகள் மகிழ்ச்சி…

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நெல் நேரடி கொள்முதல் நிலையம் திறப்புவிழா-விவசாயிகள் மகிழ்ச்சி…

by ஆசிரியர்

அரியலூர் மாவட்டம் காமரசவல்லி கிராமத்தில் இன்று (09/10/2018) தமிழ்நாடு நெல் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி தலைமையில் அரசு தலைமைக் கொறடா எஸ் ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிலையத்தைத் திறந்து வைத்தார்.

மேலும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயம் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி ஒன்றிய செயலாளர் மற்றும் பொறுப்பாளர்கள் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நெல் நேரடி கொள்முதல் நிலையம் அப்பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராம விவசாயிகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என அப்பகுதி மக்கள் கூறினார்கள்.

தனியாரிடம் நெல் விற்பனை செய்யும்போது ஒரு மூட்டைக்கு 200 ரூபாய் குறைத்து தனியார் நெல்லை வாங்குகிறார்கள். எங்களுக்கு அரசு நிலையம் திறந்து வைத்ததினால் மிக சந்தோசமாக இருக்கிறது.

இதேபோல் இந்தப் பகுதியில் அனைத்து விவசாயிகளும் லாபம் ஈட்ட வேண்டும் என்றால் வருஷம் முழுவதும் வருடம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்திருக்க வேண்டும் என இந்த விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அரியலூர் மாவட்ட ஆட்சி தலைவர் கூறுகையில் இந்த ஊருக்கு சொந்தமாக அரசு கட்டிடம் கட்டித் தருகிறேன். அதற்கான நிலத்தை ஒதுக்கி தாருங்கள் இந்தப் பகுதி விவசாயிகள் செழிப்பாக இருப்பதற்கு அரசு நெல் கொள்முதல் நிலையம் சொந்தமாக கட்டி திறந்து வைக்கிறோம். வரும் ஆண்டிலேயே செய்து விடுவோம் எனக் கூறினார்கள்.

மேலும் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் இந்தப் பகுதி விவசாயிகளும் போல் நானும் ஒரு விவசாயி தான் அதனாலே இந்தப் பகுதியிலும் உங்களுக்கு நீங்க விடுக்கப்பட்ட கோரிக்கையை அனைத்தையும் என்னால் முடிந்த வரை நான் அதை நிறைவேற்றித் தருவேன் என்று உறுதி கூறினார். மேலும் இந்தப் பகுதியில் தார் சாலை அமைத்து தருவதாகவும், இந்தப் பகுதி மக்கள் கிராமங்களுக்கு எதுவேண்டுமானாலும் எந்த நேரத்திலும் என்னை வந்து சந்திக்கலாம் எனவும், என்னிடம் கோரிக்கை வைக்கலாம் என்றும், நான் உங்களுக்கு நிறைவேற்றி தருகிறேன் என்றும் உறுதியளித்தார். இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தகவல்:-அபுபக்கர்சித்திக்

செய்தி:- அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் கீழை நியூஸ்( பூதக்கண்ணாடி மாத இதழ் )

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!