சொத்து வரி சீராய்வுக்கு ஆட்சேபனை மனு அளிக்க பல தெருக்களை ஒருங்கிணைத்த இரு நபர்கள்..

 

கீழக்கரை நகராட்சியின் சொத்து வரியினை பொது சீராய்வு செய்து வீட்டு வரி உயர்த்த இருப்பதாக தினசரிகளில் 10/09/2018 அன்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.  அதற்கான ஆட்சேபனை தெரிவிக்க 09/10/20188 இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் பல அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் இன்று (08/10/2018) ஆணையரை சந்தித்து தங்களுடைய ஆட்சேபனை மனுக்களை அளித்தனர்.

ஆனால் சட்ட விழிப்புணர்வு இயக்கம் உறுப்பினர் M.J.சாதிக் மற்றும் ஜாகிர் ருக்னுதீன் ஆகியோர் மனு அளிப்பதை தங்களோடு நிறுத்திவிடாமல்,  வீட்டில் இருந்து வெளியில் வர இயலாதவர்களும் ஆட்சேபனைகளை தெரிவிக்க உதவியாக அஹமது தெரு, NMT தெரு,  மேலத் தெரு மற்றும் சங்கு வெட்டித் தெருவில் வசிக்கும் மக்களிடம் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினரிடம் இருந்து மனுக்களை பெற்று கீழக்கரை நகராட்சி ஆணையரிடம் இன்று (08/10/2018) மாலை 04.00 மணியளவில் ஒப்படைத்தனர்.

சேவையை தன்னலவில் நிறுத்திக் கொள்ளாமல் அனவைரும் பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்ட இருவரும் நிச்சயமாக பாராட்டப் பட வேண்டியவர்கள்.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..