கடலூர் மாவட்டத்தில் மிகவும் ஆபத்தான நிலையை எதிர் நோக்கும் அங்கன்வாடி பள்ளி குழந்தைகள் அரசு அதிகாரிகள் அலட்சியம்..

கடலூர் அரிசிபெரியாங்குப்பம் ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட பகுதியில் பாழடைந்த தண்ணீர் டேங்க் ஒன்று ஆபத்தான நிலையில் உள்ளது. அங்கு தண்ணீர் டேங்க் அருகில் பின்புறம் சிறு சிறு பிள்ளைகள் படிக்கும் அங்கன்வாடி பள்ளிக்கூடம் உள்ளது.

இந்த ஆபத்தான சூழ்நிலையில் அங்கு குழந்தைகள் சென்றுவர ஒரு வழிப் பாதையே உள்ளது. அந்த வழியில் தண்ணீர் டேங்க் மேலே அரச மரங்கள் முளைத்து கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

தண்ணீர் டேங்கும் ஆங்காங்கே விரிசல் விட்டு ஆபத்தான நிலை உள்ளது. சிறு குழந்தைகள் 2 வயது முதல் 5 வயது குழந்தைகள் அங்கு படிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள் மீது அந்த தண்ணீர் டேங்க் இடிந்து விழுந்தால் மிகப்பெரிய ஆபத்தாக முடியும். அங்கேயே ரேஷன் கடையும் அருகிலேயே உள்ளது அரிசி பெரியாங்குப்பம் பொதுமக்கள் அங்கு தான் பொருட்களை வாங்க வேண்டிய சூழல் உள்ளது.

ஊர் பஞ்சாயத்து கூடி பேசி அந்த கட்டிடத்தை இடிக்கும்படி பலமுறை மனு கொடுத்தும் அந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட (PDO) அதிகாரிகள் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

சிறு குழந்தைகள் படிக்கும் அந்தப் பள்ளிக்கூடம் அருகே இருக்கும் தண்ணீர் டேங்க்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த இடத்திலிருந்து அகற்றி அங்கன்வாடி பள்ளிக் குழந்தைகளுக்கு எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காத வகையில் பள்ளிக்கூடம் சென்று வர வழிவகை செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக் கொள்வதோடு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மிகப்பெரிய போராட்டமாக இந்த சம்பவம் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என கடலூர் அரிசிபெரியாங்குப்ம் பகுதி மக்கள் வேதனையுடன் கூறுகின்றார்கள். அந்த பகுதி மக்கள் சார்பாகவும் எங்கள் அமைப்பு சார்பாகவும் தண்ணீர் டேங்கை அகற்றும்படி கேட்டுக்கொள்கிறோம், என  ஆ.வைத்தியநாதன்
அனைத்து நுகர்வோர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவை தெரிவித்தார்.

தகவல்;- அபுபக்கர்சித்திக்

செய்தி தொகுப்பு:அ.சா.அலாவுதீன்.மூத்த நிருபர்
கீழை நியூஸ் ( பூதக்கண்ணாடி மாத இதழ் )

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..