குற்றால அருவியில் குளிக்கலாம் வாங்க,இது கேதையுறும்பு ஊராட்சியின் அவலம்தான் போங்க..

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், தாலுகா கேதையுறும்பு, ஊராட்சி. கேதையுறும்பு ஊர் கூட்டுறவு அலுவலகம், எதிர்ப்புறம் சாலை அருகே உள்ள முக்கிய குழாய் உடைப்பு ஏற்பட்டு குற்றால அருவி போல் காட்சியளிப்பதோடு மட்டுமன்றி அந்தக்குடிநீரை பயன்படுத்த முடியா ஒரு அவலநிலைக்கு தள்ளபடுகிறோம் என்பதுதான் உண்மை.

மேலும் இந்த குழாயை பழுது நீக்கி பொது மக்களுக்கு தடையின்றி நீரை வழங்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

செய்தி . P.அழகர்சாமி / ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .