
கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் நாட்டு நலப் பணித்திட்டம் சார்பாக இரத்த தான சிறப்பு முகாம் கல்லூரி முதல்வர் முனைவர் அப்பாஸ் மைதீன் தலைமையிலும், கல்லூரி டீன் முனைவர் முஹம்மது ஜஹாபர் முன்னிலையிலும் நடைபெற்றது.
கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மீரா முகைதீன் அனைவரையும் வரவேற்றார். இராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. காமினி IPS இரத்த தான சிறப்பு முகாமினை துவக்கி வைத்து இரத்த தானம் செய்ய முன்வந்த கல்லூரி மாணவர்களை பாராட்டியும் இரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் விளக்கினார்.
மேலும் நாட்டு நல பணித்திட்டத்தின் கீழ் மாணவர்கள் அனைவரும் சமுதாய வளர்ச்சிக்கு பாடுபட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவர் டாக்டர். சு. அபிராமி தலைமையிலான மருத்துவக் குழு கல்லூரி மாணவர்கிடையே 70 யூனிட் இரத்தங்களை சேகரித்தனர்.
நன்றியுரை நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பூபாலன் வழங்கினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இராமநாதபுர மாவட்ட இரத்த தான முகாம் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ஐயப்பன் செய்திருந்தனர்.